நடிகர்கள்
ஆதி
நந்தா
சிந்து மேனன்
சரண்யா மோகன்
H2O
சிவப்பு நிறம்
மற்றும் பலர் நடித்துள்ளனர்
ஓ போடு
கச்சிதமான காட்சியமைப்பு மற்றும் தொகுப்பு.
மிரட்டல் இசை.
ஆதியின் கம்பீரக் குரல்.
அனைவரது நடிப்பு.
இயக்குநரின் (அறிவழகன்) உழைப்பு.
தயாரிப்பாளரின் (ஷங்கர்) நம்பிக்கை.
கதை
வரிசையாக கொலைகள்...
செய்வது யார்? ஏன்?
இது தான் கதை கரு.
இதற்கு மேல் கதையை சொன்னால் தவறில்லை. ஆனால் இப்படத்தின் கதை பற்றி படம் பார்க்கும் முன் தயவு செய்து யாரிடமும் கேட்டுவிடாதீர்கள். படம் பார்க்கும் போது த்ரில் வேணும்ல.
நம்ம பார்வை
பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள் ஆனால் இப்படத்தில் தண்ணீருக்காகவே செலவழித்திருக்கிறார். இந்த படத்தில் தண்ணீரும் ஒரு கதாபாத்திரமாகவே மாறியுள்ளது. தரையில் தண்ணீர் நகரும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்குது.
பல இடங்களில் ஆதியும் சில இடங்களில் சரண்யா மோகனும் தங்கள் நடிப்பால் கைத்தட்டல் வாங்குகிறார்கள். பின்னணி இசைக் கோர்வைக்காக தமனுக்கு மிகப்பெரிய ஓ போட்டாலும் பத்தாது. அப்படி ஒரு இசை மிரட்டல். இரு பாடல்கள் தான் படத்தில் என்றாலும் மனதினில் பதிகிறது. மீடியம் என்ற வார்த்தை ஏற்கனவே யாவரும் நலம் படத்தில் அனைவரும் பரிட்சயப்பட்டது தான் இப்பினும் அது நெருடலாய் தோன்றவில்லை.
படம் தொடங்கியதிலிருந்து இறுதி வரை கை தட்டி கொண்டே இருக்கலாம். அப்படியொரு அழகு. இயக்குநரே இத்தனை காலம் எங்கிருந்தீர்கள்?
ஈரத்தை சங்கம் திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் சில்லென்று சிறு சிறு தூரல்கள் என்னை முத்தமிட்டது. மனதிலிருந்து ஈரம் இன்னும் நீங்கவில்லை.இந்த த்ரில்லர் மூவியிலும் மென்மையான காதலை சொல்லிருக்கிறார்கள்...
ஈரம் குளிர்ச்சியாய் ஒரு மிரட்டல்

0 comments:
Post a Comment